எடப்பாடி பழனிசாமியின் அரசு தானாக கவிழும்

எடப்பாடி பழனிசாமியின் அரசு தானாக கவிழும்
Edapadi government will fall Says Maitreyan MP

சென்னை: முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அ.தி.மு.க இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியுமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஓ. பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்த மைத்ரேயன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:

அ.தி.மு.க இரு அணிகளும் இணைவது பேச்சுவார்த்தையை பொறுத்து தான் அமையும். இந்த ஆட்சியை பொறுத்த வரையில் அமைச்சர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டு, ஆட்சியின் அலங்கோலம் போன்ற காரணங்களினால் தானாகவே பாரம் தாங்காமல் கவிந்து போகும்.

மக்களின் ஆதரவும் இப்போது உள்ள ஆட்சியில் இல்லை, எனவே சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வரும். அதில் நாங்கள் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு மைத்ரேயன் கூறினார்.

Edapadi government will fall Says Maitreyan MP