உலகின் குண்டு பெண்ணின் உடல் எடை பாதியாக குறைந்தது

உலகின் குண்டு பெண்ணின் உடல் எடை பாதியாக குறைந்தது
Egyptian Eman Ahmed sheds her weight to half

மும்பை: எகிப்து நாட்டை சேர்ந்த எமான் அகமது (36) எனும் பெண் தன்னுடைய 11-வது வயதில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து படுத்த படுக்கை ஆன அவரது உடல் எடை 500 கிலோவானது.

இந்நிலையில், தன்னுடைய உடல் எடையை குறைப்பதற்காக எமான் அகமது மும்பை மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார், தற்போது எமான் அகமதுவின் உடல் எடை 242 கிலோவாக குறைந்திருப்பதாக மருத்துவர் கூறியுள்ளார்.

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால் தொடர்ந்து எடை குறைப்பதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Egyptian Eman Ahmed sheds her weight to half