நடுவருடன் வாக்குவாதம் டோனிக்கு கங்குலி ஆதரவு

நடுவருடன் வாக்குவாதம் டோனிக்கு கங்குலி ஆதரவு

ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில், சென்னை வீரர் சாண்ட்னருக்கு பென்ஸ்டோக்ஸ் வீசிய பந்து நோபால் சர்ச்சையில் சிக்கியது.  நடுவரான உல்ஹாஸ் காந்த்தே நோ பால் கொடுத்து விட்டு, பின்னர் தனது முடிவை மாற்றி நோபால் இல்லை என்று அறிவித்தார். இதனால் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், டோனி நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்டது.

டோனியின் செயலுக்கு முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி டோனிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது: “ அனைவரும் மனிதர்கள் தான், அவருடைய போட்டித்தன்மை வியக்க வைக்கிறது” என்று கூறியுள்ளார்.