ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் அபராதம்

ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுத்தால் அபராதம்
Government announced fine if anyone takes selfie in railway stations

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் ‘செல்பி’ கலாசாரம் வேகமாக பரவி வருகிறது, தற்போதைய தொழில்நட்ப வளர்ச்சியில் செல்போன்கள் மூலம் ‘செல்பி’ எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, இதனால், ரெயில்வேயில் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இதனை தடுக்க, ரெயில் நிலையங்கள், தண்டவாள பகுதி, ரெயில் நிலைய வளாகம், பிளாட்பாரங்கள், ரெயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ரெயில் நிலையங்களுக்குள் ஆபத்தான முறையில் ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

அதேபோல, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரெயில் நிலைய வளாகத்தில் குப்பை தொட்டியை தவிர, பிற இடங்களில் குப்பை கொட்டும் பயணிகளிடம் இருந்து ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Government announced fine if anyone takes selfie in railway stations