சென்னையில் பலத்த மழை நீடிக்கும்

சென்னையில் பலத்த மழை நீடிக்கும்
Heavy Rainfall will continue in Chennai

சென்னை: சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று இலங்கை அருகே மையம் கொண்டிருந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சியானது மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையே மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களிலும் புதுவையிலும் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும்.

இதே போல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இன்று மாலையில் இருந்து மீண்டும் 48 மணி நேரத்துக்கு பலத்த மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Heavy Rainfall will continue in Chennai