பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்

சென்னை: இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் பயணிப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம் ஆக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக டிஜிபி டிகே ராஜேந்திரன் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. மோட்டார் வாகன விதிகளை கண்டிப்பாக அமல்படுத்துவதாக தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
மேலும், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து தொலைக்காட்சி, பத்திரிகை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் சென்றோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தர உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.