ஹோண்டா, ’தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் 2018’

ஹோண்டா, ’தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் 2018’

ஹோண்டா, ’தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் 2018’- ஐ ஆரம்பித்திருக்கிறது!!

இந்தியா முழுவதிலும் 5,700 இடங்களில் #ஹெல்மெட்ஆன்லைஃப்ஆன் [#HelmetOnLifeOn] எனும் சாலைப் பாதுகாப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்து இருக்கிறது ஹோண்டா.

* ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா, அனைத்து பிரிவிலான வயதுடையோர்களிடம் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்கி வருகிறது.

* ஹோண்டாவின் 12 ட்ராஃபிக் பார்க்குகள், ஒரு வாரத்தில் ஆயிரக்கணக்கான மக்களிடையே சாலைப் பாதுகாப்பு குறித்த தகவல்களைப் பரப்பியிருக்கிறது.

* ஹோண்டாவின், 22,000-க்கும் அதிகமான உடன் பணிப்புரிபவர்கள் இந்தியா முழுவதிலும் சாலைப் பாதுகாப்பு உறுதி மொழியை எடுத்துக்கொண்டனர்.

* ஹோண்டாவின் 57,000-க்கும் அதிகமான அவுட்லெட்கள், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நல்ல தாக்கத்தை உருவாக்கும்வகையில் #HelmetOnLifeOn என்ற செய்தியைப் பரப்பும் பிரச்சாரத்தில் ஈடுப்படுகின்றனர்.

சென்னை, 23 ஏப்ரல் 2018 – ஹோண்டா மோட்டர் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா ப்ரைவேட் லிமிடெட், ‘தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் – 2018’-ஐ மாபெரும் நிகழ்வாக கொண்டாடுவகையில், இந்தியா முழுவதிலும் #HelmetOnLifeOn என்ற செய்தியுடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறது. ’தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம் -2018’, ஏப்ரல் 23-ம் தேதி 2018 முதல் 30 ஏப்ரல் 2018 வரை கொண்டாடப்படுகிறது.

இந்தியா முழுவதிலும், ஒரு வாரம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பல்லாயிரக்கணக்கான மக்களிடையே கொண்டு சேர்ப்பதுதான் இந்நிகழ்வின் நோக்கமாகும். இந்நிகழ்வின் தொடக்கமாக, ஹோண்டாவின் 22,000 பணீயாளர்கள், சாலைப் பாதுகாப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். இதோடு, ஹோண்டா தனது 12 ட்ராஃபிக் பார்க்குகளின் மூலமாக, கார்பொரேட்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்தும், தனது 5,700-க்கும் அதிகமான அவுட்லெட்களின் மூலமாகவும் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்கும்.

ஆட்டோ எக்ஸ்போ 2018-ல் ஹோண்டாவின் ப்ராண்ட் அம்பாசடர்களான தாப்ஸீ பன்னு மற்றும் அக்‌ஷய் குமார் ஆகிய இரு நட்சத்திரங்கள் #HelmetOnLifeOn என்னும் கருப்பொருளிலான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து அறிவித்தனர். சாலைப் பயணங்களின் போது ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அனைத்து வயதினரிடமும் விழிப்புணர்வை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.

சாலைப் பாதுகாப்பில் அக்கறையுடன் செயல்பட்டு வருவது குறித்து ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் ப்ராண்ட் அண்ட் கம்யூனிகேஷன் பிரிவின் துணைத்தலைவர் திரு. நாகராஜ் [Mr Prabhu Nagaraj- Vice President, Brand & Communication, Honda Motorcycle & Scooter India Pvt. Ltd] பேசுகையில், ’’ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் ஒரு பொறுப்புள்ள, வாகன உற்பத்தியாளராக, இந்தியாவில் ஒவ்வொரிடமும்  சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை  உருவாக்குவதில் விஷயத்தில் அக்கறையுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகிறது.  எங்களது சாலைப் பாதுகாப்பு பிரச்சாரமான #HelmetonLifeOn , ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டது. எங்களது முயற்சிகளில் இது ஒரு அடுத்தக்கட்ட முயற்சியாகும். எங்களது சாலைப் பாதுகாப்பு பிரச்சாரங்களின் மூலம், இந்தியாவில் 1.6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தேசிய பாதுகாப்பு வாரம் மூலமாக மக்களை சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு அம்சங்களில் ஈடுப்பட வைத்து விழிப்புணர்வை அதிகரிப்போம்’’ என்றார்.

இந்தியச் சாலைகளை, சாலைகளில் பயணிக்கும் அனைவருக்கும் பாதுகாப்பானதாக உருவாக்கும் வகையில், ஹோண்டா தனது 5,700-க்கும் அதிகமான டச் பாயிண்ட்களின் மூலம் சாலைப் பாதுகாப்பு பயிற்சிகளையும், விழிப்புணர்வு முயற்சிகளையும் செயல்படுத்தி வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இவ்விடங்களில், ‘ரைடிங் ட்ரெய்னர் சிமுலேட்டர்கள், பாதுகாப்பு உறுதிமொழி, பாதுகாப்பு வினாடி-வினா போன்றவை தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம்- 2018 முழுவதும் நடைப்பெறும். குறிப்பாக ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும்.

5 பிராந்திய பகுதிகளில் செயல்பட்டு வரும் ஹோண்டாவின் 12 ட்ராஃபிக் பார்க்குகளின் மூலமாக ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பதோடு மட்டுமில்லாமல், பாதுகாப்பான சாலைப்பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வையும்  ஊக்குவிக்கப்படும். குறிப்பாக, சர்வதேச அளவில் பயிற்சிப்பெற்ற சாலைப் பாதுகாப்பு ஆலோசகர்களின் மூலமாக, குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு ப்ரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் பயிற்சித்திட்டங்கள்  மூலம் விழிப்புணர்வு உருவாக்கப்படும்.