முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி
ரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவப் பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக அவர் இன்று காலை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் மருத்துவப் பரிசோதனை முடிந்து உடனடியாக அவர் வீடு திரும்புவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.