நான் ரோபோ இல்லையே..! பில்கேட்ஸ்-க்கு 67 வயதில் மலர்ந்த காதல்..

நான் ரோபோ இல்லையே..! பில்கேட்ஸ்-க்கு 67 வயதில் மலர்ந்த காதல்..
நான் ரோபோ இல்லையே..! பில்கேட்ஸ்-க்கு 67 வயதில் மலர்ந்த காதல்..

மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தனது 67 வயதில் மார்க் ஹெர்ட் என்பவரை காதலிக்க தொடங்கி டேட்டிங் செய்து வருகிறார். முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்டை நிறுவிய பில்கேட்ஸ் தன்னுடன் பணியாற்றிய மிலிண்டா கேட்ஸ் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் ஜெனிபர், போபே, ரோரி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், 27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பின் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பில்கேட்ஸ், மிலிண்டா கேட்ஸ் தம்பதியினர் விவாகரத்து செய்தனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இந்த மணமுறிவு ஏற்பட்டது.

இந்நிலையில், பில்கேட்ஸ் தற்போது பவுலா ஹர்டு என்ற பெண்ணுடன் காதலித்து டேட்டிங் செய்து வருகிறார். 60 வயதான பவுலா முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் நிறுவனத்தின் சிஇஓவாக இருந்த மார்க் ஹர்ட்டின் மனைவி. மார்க் ஹர்டு 2019ஆம் ஆண்டு புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர். மார்க் ஹர்டு, பவுலா ஹர்டுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், கணவரை இழந்த பவுலாவும் விவகாரத்தான பில்கேட்ஸ்சும் தற்போது டேட்டிங் செய்து வருகின்றனர். கடந்த மாதம் இறுதியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இருவரும் ஜோடியாக ரசித்து பார்த்தனர். இதன் மூலம் இருவரும் டேட்டிங் செய்கிறார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியானது. இது குறித்து பில்கேட்ஸ் இடம் கேள்வி எழுப்பப்பட்டதற்கு பில்கேட்ஸ் பதில் அளித்துள்ளார். உங்களுக்கு மீண்டும் காதல் வருமா என்ற கேள்விக்கு அவர், "கண்டிப்பாக நான் ஒன்றும் ரோபோ இல்லை" என்று பதில் அளித்துள்ளார். எனவே, பில்கேட்ஸ் கூறிய இந்த பதிலும் இருவருக்கும் இடையே மலர்ந்த காதலை உறுதிபடுத்தும் விதமாக அமைந்துள்ளது.

பில்கேட்ஸ் மற்றும் மிலிண்டா விவாகரத்து செய்து பிரிந்தாலும், கேட்ஸ் பவுண்டேஷன் என அவர்கள் தொடங்கி தொண்டு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். 2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொண்டு அமைப்பின் பணிகள் எக்காரணத்தை கொண்டும் நிற்காது என்று தெரிவித்துள்ள மிலிண்டா, நட்புடன் தங்கள் பணிகளை இணைந்து மேற்கொள்வோம் எனத் தெரிவித்துள்ளார்.