குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு தடை

குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு தடை
ICJ Says Pakistan cannot hang Kulbushan Jadhav till his final verdict

திஹேக்: பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷன் ஜாதவுக்கு ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்த இந்தியா, ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விசாரணை நடத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கிற்கு இன்று தீர்ப்பு வழங்கிய சர்வதேச நீதிமன்றம், இவ்வழக்கில் சர்வதேச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பினை வழங்கும் வரை குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என சர்வதேச நீதிமன்ற நீதிபதி ரோனி ஆப்ரகாம் உத்தரவிட்டு உள்ளார்.

ICJ Says Pakistan cannot hang Kulbushan Jadhav till his final verdict