சர்வதேச பொறியியல் அங்கீகாரம்

சர்வதேச பொறியியல் அங்கீகாரம்
IET Accrediation for SRM University

SRM நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கு சர்வதேச பொறியியல் அங்கீகாரம்

சர்வதேச பொறியியல் அங்கீகாரம் என்பது உலகின் தலைசிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சமூகங்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்த அங்கீகாரம் பொறியியல் குழு மூலம் உருவாக்கப்பட்டு உரிமம் பெற்றது. இது பல பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பாடத்திட்டங்களை வழங்கி வருகிறது. இந்த அங்கீகாரம் சர்வதேச பொறியியல் கூட்டணியின் (IEA)  மூலமாக ஆட்சி செய்யபடும் வாஷிங்டன் மற்றும் சிட்னி உடன்பாடுகள் வாயிலாக முதல் தரம் காட்டியாக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இந்த அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் ENAEE எனப்படும், ஐரோப்பா சார்ந்த பொறியியல் கல்விக்கான அங்கீகாரம் பெற தகுதி உடையவர்களாக இருப்பார்கள். இந்த சர்வதேச பொறியியல் அங்கீகாரம் 145 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக தொடங்கப்பெற்றது. இதற்கு ஐரோப்பா சமூக உரிமம் வழங்கியுள்ளது. 60 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உலகம் முழுவதும் இதனை பெற்றுள்ளது. இவற்றுள் இம்பீரியல் கல்லூரி – லண்டன், லீட்ஸ் பல்கலைக்கழம் போன்ற சிறந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் இந்த பெருமைக்குரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

SRM  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவமனமானது பி.டெக்., கம்ப்யுட்டர் இன்ஜினியரிங், பி.டெக்., சாப்ட்வேர் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங், ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் ஆகிய நான்கு பொறியியல் பட்டப்படிப்புக்கான அங்கீகாரத்தை IET  அமைப்பிடமிருந்து பெறுகின்றது. இதற்கான விழா SRM பல்கலைக்கழகக் கருத்தரங்க அறையில் ஜனவரி 30 செவ்வாய்கிழமையன்று நடைபெற்றது.

IET தர அங்கீகாரத்தை இவ்வமைப்பின் அயலகச் செயற்பாட்டுத் தலைவர் திரு லான் மெர்சர் அவர்கள் வழங்க எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் திரு T.R. பாரிவேந்தர் பெற்றுக்கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப நிறுவனத்தின் மேலாண்மைக் குழுவினர்கள், IET யின் பிராந்தியத் தலைவர் திரு இராகவன் மற்றும் எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர்கள், புலத்தலைவர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப நிறுவனம் இவ்வங்கீகாரத்திற்கு 2013 ஆம் ஆண்டு முதல் விண்ணப்பித்து முயற்சித்து வந்தது. இவ்வங்கீகாரமானது 2017-18 ஆம் கல்வியாண்டு முதல் அடுத்து வரும் மூன்று கல்வியாண்டிற்கும் பொருந்தும் கூடுதலாக இவ்வங்கீகாரத்தின் மூலம் IET அமைப்பின் நேரடி பயன்களை எஸ்.ஆர்.எம் தொழில்நுட்ப நிறுவனம் பெறவுள்ளது.

இந்திய அளவில் இவ்வங்கீகாரத்தைப் பெறும் நான்காவது நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக எஸ்.ஆர்.எம் விளங்குகிறது. IET யுடன் இணைந்து செயல்படும் இரண்டாவது நிகர்நிலைப்பல்கலைக்கழகமாக எஸ்.ஆர்.எம் திகழும். பொறியியல் கல்வியுலகில் மிகப்பெரிய உலகலாவிய அங்கீகாரமாக இது அமையும். மேலும் பன்னாட்டுத் தொடர்பு மற்றும் வேலைவாய்ப்பிற்கு மிகப்பெரிய பயனாக இந்நிறுவன மாணவர்களுக்கு அமையும்.   

IET Accrediation for SRM University