இந்திய அணி திணறல்

இந்திய அணி திணறல்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆட்டத்தின் தொடக்கத்திலே இந்திய அணி ரன் எடுக்க முடியாமல் திணறியது, ராகுல் (2), முரளி விஜய் (11),. கேப்டன் கோலி (3), ரஹானே (13) என வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். புஜாரா மட்டும் அபாரமாக விளையாடி சதம் விளாசினார், புஜாரா 123 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்களை எடுத்தது.