சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய சாதனை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய சாதனை
IPL 2018 - CSK Team creates History

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 10 சீசன்கள் நிறைவடைந்துள்ளன. இதில் மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.

இந்தாண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் பிளே-ஆப் சுற்றுக்கு ஐதராபாத் அணி முதலாவதாக தகுதிபெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி, ஐதராபாத் அணியை வீழ்த்தி 8-வது வெற்றியை பதிவுசெய்தது. இதன்மூலம் 16 புள்ளிகள் பெற்ற சென்னை அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது.

இந்த சீசனின் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றதன் மூலம் சென்னை அணி ஒன்பதாவது முறையாக ஐபிஎல் தொடரின் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்று சாதனை படைத்துள்ளது. சென்னை அணி கடந்த இரண்டு ஆண்டுகள் தடையினால் ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை. இந்த முறை பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் விளையாடிய அனைத்து சீசனிலும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்ற ஒரே அணி என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படைத்துள்ளது.

சென்னை அணி முன்னதாக விளையாடிய 8 சீசனில், 2 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதோடு, 4 முறை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சென்னை அணியை தவிர மும்பை இந்தியன்ஸ் அணி 11 சீசனில் 7 முறை பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.

IPL 2018 - CSK Team creates History