அபிநந்தன் கைது: இன்று மாலை முக்கிய ஆலோசனை

அபிநந்தன் கைது: இன்று மாலை முக்கிய ஆலோசனை

இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது, அப்போது நடந்த தாக்குதலில் இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது. 

அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக அபிநந்தனை ஒப்படைக்க வேண்டும் என நேற்று இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் துணை தூதரிடம் வெளியுறவுத்துறை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய விமானப்படை வீரர் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் மத்திய அமைச்சரவை இன்று மாலை 6.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறது.