நாடாளுமன்றத்திற்கான பரபரப்பான வாக்குப்பதிவு தொடங்கியது!

நாடாளுமன்றத்திற்கான பரபரப்பான வாக்குப்பதிவு தொடங்கியது!

நாடு முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (ஏப்ரல் 11–ந் தேதி) தொடங்கி வரும்  19–ந் தேதி வரை ஏழு கட்ட தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஆந்திரா, அருணாசலபிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் முதல்கட்ட ஓட்டுப்பதிவு இன்று (வியாழக்கிழமை)  துவங்கி நடைபெற்று வருகிறது. 

ஆந்திராவில் 25, அருணாசலபிரதேசத்தில் 2, அசாமில் 5, பீகாரில் 4, சத்தீஷ்காரில் 1, காஷ்மீரில் 2, மராட்டியத்தில் 7, மணிப்பூரில் 1, மேகாலயாவில் 2, மிசோரமில் 1, நாகலாந்தில் 1, ஒடிசாவில் 4, சிக்கிமில் 1, தெலுங்கானாவில் 17, திரிபுராவில் 1, உத்தரபிரதேசத்தில் 8, உத்தரகாண்டில் 5, மேற்கு வங்காளத்தில் 2, லட்சத்தீவுகளில் 1, அந்தமான் நிகோபார் தீவுகளில் 1 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடக்கிறது.

91 நாடாளுமன்ற தொகுதிகளிலும், ஆந்திரா, அருணாசலபிரதேசம், சிக்கிம், ஒடிசா சட்டசபை தேர்தலிலும் நேற்று முன்தினம் மாலை அனல் பறக்கும் பிரசாரம் முடிந்தது. இன்று (வியாழக்கிழமை) ஓட்டுப்பதிவு நடப்பதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேசம், காஷ்மீர், மேற்கு வங்காளம், அந்தமான், லட்சத்தீவுகளில் காலை 7 மணிக்கு தொடங்கியது.

* ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவருடைய குடும்பத்தினர் அமராவதியில் வாக்களித்தனர்.

* ஆந்திராவில் வாக்கு சாவடிகளில் 50க்கும் மேற்பட்ட மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு தாமதமானது.

* லட்சத்தீவில் காலை 9 மணி நிலவரப்படி  9.83  சதவீத ஓட்டுப்பதிவாகி இருந்தது. தெலுங்கானாவில் 9 மணி நிலவரப்படி 10.6 சதவீதமும், அந்தமானில் 5.83 சதவீதமும், அசாமில் 10.2 சதவீதமும், அருணாசலபிரதேசத்தில் 13.3 சதவீதமும் ஓட்டுப்பதிவாகி  இருக்கிறது.

*  உத்தரகண்ட் - 13.34%,  பீகார் - 5%, மேகாலயா - 20.41%,  நாகாலாந்து - 21%,மணிப்பூர் - 16.09%,  மிசோரம் - 17.46%  ஓட்டுப்பதிவாகி இருக்கிறது..

* ஐதராபாத் எம்.பி. அசாசுதீன் ஒவைசி  தனது தொகுதியில் வாக்களித்தார். ஜெகன்மோகன் ரெட்டி கடப்பா தொகுதியில் ஓட்டளித்தார்.

* மேற்கு வங்காளம் 18.12 சதவீதம், மிசோரம்  17.5 சதவீதம், சத்தீஷ்கர் 10.2 சதவீதம், மணிப்பூர் 15.5 சதவீதம்.