ஜெயலலிதாவின் மரணத்தில் சிபிஐ விசாரணை வேண்டும்: திருநாவுக்கரசர

ஜெயலலிதாவின் மரணத்தில்  சிபிஐ விசாரணை வேண்டும்:  திருநாவுக்கரசர
Jayalalitha death should be investigated by CBI Su Thirunavukkarasar

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். சந்திப்பு முடிந்த பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது "நடிகர் ரஜினியுடனான சந்திப்பு அரசியல் தொடர்பான சந்திப்பு இல்லை தனது இல்லத்திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்ததாக தெரிவித்தார்.

மேலும், தமிழக ஆட்சியை யாரும் கலைக்க வேண்டிய அவசியம் இல்லை உட்கட்சி குழப்பத்தினால் தானே கலைய வாய்ப்புள்ளது என கூறினார், அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு என்பது பதவிச்சண்டைக்காகத்தானே தவிர மக்களின் நலன் கருதி இணைவதாக தெரியவில்லை என அவர் கூறினார்.

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டுவர சிபிஐ விசாரணையே தேவை எனவும், போயஸ் கார்டன் வேதா இல்லம் நினைவிடமாக்கப்படுவது வரவேற்கத்தக்கது, அதனை காலதாமதம் இல்லாமல் உடனே செயல்படுத்த வேண்டும் என திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டார்.

Jayalalitha death should be investigated by CBI Su Thirunavukkarasar