ஜெயலலிதாவின் மருத்துவ செலவை அ.தி.மு.க. அம்மா அணி வழங்கியது!

ஜெயலலிதாவின் மருத்துவ செலவை அ.தி.மு.க. அம்மா அணி வழங்கியது!
Jayalalithaa medical checkup 6 crore provided to Apollo hospital

சென்னை: தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந்தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு 2 மாதங்களுக்கு மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் டிசம்பர் 5-ந்தேதி ஜெயலலிதா உயிர் இழந்தார்.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வகையில் ரூ. 6 கோடி மருத்துவ செலவு ஆனது. இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவ செலவான ரூ.6 கோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ள அ.தி.மு.க. அம்மா அணி, அப்பல்லோ மருத்துவமனையிடம் வழங்கியது.

Jayalalithaa medical checkup 6 crore provided to Apollo hospital