டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல்?: பிசிசிஐ வட்டாரங்கள் தகவல்..!

டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்படுவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த உடன் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் தொடர் தோல்வியை அடுத்து இந்திய அணி மீது பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்திய அணி மூத்த வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, இங்கிலாந்து தொடர், ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பை என தொடர்ச்சியாக விளையாடி வருவதால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்க வாய்ப்புள்ளது.