சாம்சங்க் கேலக்ஸி S9, S9+ ஸ்மார்ட்போன்கள்

சாம்சங்க் கேலக்ஸி S9, S9+ ஸ்மார்ட்போன்கள்
Kajal Aggarwal launches Samsung Galaxy S9 and S9 plus smartphones

சென்னை, மார்ச் 15, 2018 - இந்தியாவின் நெ.1 என்றும் மிகவும் நம்பகமான ஸ்மார்ட்போன் பிராண்டு என்றும் பெயர் பெற்றிருக்கும் சாம்சங்க் அதன் கேலக்ஸி S9, S9+ ஸ்மார்ட்போன்களை பிரீ-புக் செய்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு சென்னையில் டெலிவரி செய்ய ஆரம்பித்துவிட்டது. விழாக்கோலம் பூண்டிருந்த மிக ஆடம்பரமான மேடையில் ஒரு சில முக்கிய வாடிக்கையாளர்கள் இந்த அதி நவீன போன்களை சாம்சங் இந்தியாவின் திரு. மகேஷ் அலன்தட் - டைரக்டர், சாம்சங் இந்தியா மற்றும் பூர்விகா மொபைல்ஸ்-ன் திரு. யுவராஜ் முன்னிலையில் சூப்பர்ஸ்டார் காஜல் அகர்வாலிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

”கேலக்ஸி S9+ போனை கடந்த சில நாட்களாக நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன், இது மிகவும் அற்புதமாக இருக்கிறது. இந்த அழகான போன் என் பர்சனாலிடியுடன் ஐக்கியமாவது ஓர் ஆனந்த அனுபவம் என்பேன்,” என்கிறார் காஜல் அகர்வால்.

கேலக்ஸி S9, S9+  போன்களில் உலகத்தின் மிகச் சிறந்த கேமராவின் டூயல் அபெர்ச்சர் லென்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளன.

”கேலக்ஸி S9, S9+ வகை போன்கள் அதன் வரிசையில் தனிப்பிறவிகள்.  உன்னதமான கேமரா அம்சங்களுடன் கிடைக்கும் இந்த போன்களில் போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களைப் பதிவு செய்யும் அனுபவம் வேறு எதிலும் கிடைக்காது.  இதிலிருக்கும் சூப்பர் ஸ்லோ-மோ, ஏஆர் இமோஜி வசதிகளைப் பயன்படுத்தி இதுவரை இல்லாத புதிய வழிகளில் நீங்கள் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும்.” என்று திரு. அசிம் வார்ஸி, சீனியர் வைஸ் பிரசிடெண்ட், மொபைல் பிசினெஸ், சாம்சங் இந்தியா கூறுகிறார்.

கேலக்ஸி S9, S9+ தேதியிலிருந்து முறையே ரூ.57,900 மற்றும் ரூ.64,900 விலைகளில் 64GB  வேரியன்டுகளிலும்,  ரூ.65,900 மற்றும் ரூ.72,900 விலைகளில் 256GB  வேரியன்டுகளிலும் கிடைக்க ஆரம்பமாகிவிடும். இந்த தனிப்பிறவிகள் மூன்று வண்ணங்களில் - லைலாக் பர்பிள், கோரல் புளூ மற்றும் மிட்நைட் பிளாக் - கிடைக்கும்.

`ஒரு சில ரீடெய்ல் ஸ்டோர்களில் பேடிஎம் மால் கியூஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்து இக் கருவியை வாங்கும் போது கேஷ்பேக் ஆக ரூ.6,000 தொகையைப் பெறலாம். எச்டிஎஃப்சி வங்கி டெபிட் மற்றும் கிரிடிட் கார்டைப் பயன்படுத்தி ‘நோ காஸ்ட் இஎம்ஐ’ ஆப்ஷனில் கேலக்ஸி S9, S9+ வாங்கினாலும் பயனர்கள் ரூ.6,000 கேஷ்பேக் பெறலாம். ரெகுலர் எக்ஸ்சேஞ்ச் விலையிலிருந்து சாம்சங்க் கேலக்ஸி லாயலிஸ்டுகள் கேலக்ஸி S9, S9+  க்கு அப்கிரேட் செய்துகொள்ளும் போது அவர்ளுக்கு கூடுதல் ரூ.6,000 போனஸ் கிடைக்கும்.

ஒப்பில்லாத டேட்டா, ஒப்பில்லாத டாரிஃப், ஒப்பில்லாத என்டர்டெயின்மென்ட் பேக்கேஜுகளுடன் பயனர்கள் அட்டகாசமான ஆதாயங்களைப் பெற, சாம்சங்க் நிறுவனம் நாட்டின் முன்னணி ஆபரேட்டர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பதும் இதிலிருக்கும் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

கேலக்ஸி S9, S9+ குறித்து அதிக விபரங்களைத் தெரிந்துகொள்ள  : https://news.samsung.com/in/,

https://news.samsung.com/bharat/ மற்றும் http://www.samsung.com/in/smartphones/galaxy-s9/ பக்கங்களைப் பாருங்கள்.

Kajal Aggarwal launches Samsung Galaxy S9 and S9 plus smartphones