விமானி அபிநந்தனின் பெற்றோரிடம் பேசிய கமல்ஹாசன்

விமானி அபிநந்தனின் பெற்றோரிடம் பேசிய கமல்ஹாசன்

காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை இந்திய போர் விமானங்கள் விரட்டி சென்ற போது, அப்போது ஒரு இந்திய விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தது, அதிலிருந்த இந்திய விமானி அபிநன்தனை பாகிஸ்தான் கைது செய்தது.

இந்த நிலையில், அபிநந்தனின் பெற்றோரிடம் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தொலைபேசி வழியே பேசினார். அவர்களிடம் அபிநந்தன் நலமுடன் இந்தியாவுக்கு திரும்பி வருவார் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.