இரத்த குறைபாடு நோய்களுக்கான இந்தியாவின் முதல் மருத்துவமனை ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’! - சென்னையில் திறக்கப்பட்டது
இரத்த குறைபாடு நோய்களுக்கான இந்தியாவின் முதல் மருத்துவமனை ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’! - சென்னையில் திறக்கப்பட்டது
தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற நோயறிதல் மையங்களில் ஒன்றான ஹைடெக் நோயாறிதல் மையங்கள் (Hiteck Labs) நிறுவனர் மற்றும் முன்னாள் மருத்துவ இயக்குநரான டாக்டர்.எஸ்.பிகணேசன், 2021 ஆம் ஆண்டு தனது ஹைடெக் நிறுவனத்தை வேறு ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறியவர் தற்போது மருத்துவ துறையில் மீண்டும் ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
இரத்த குறைபாட்டினால் ஏற்படும் நோய்கள் மற்றும் இரத்த புற்றுநோய்களை கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான பிரத்யேக அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட மருத்துவமனையை டாக்டர்.எஸ்.பி.கணேசன் சென்னையில் ஆரம்பித்துள்ளார்.
‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ என்ற பெயரில் சென்னை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் (பச்சையப்பன் கல்லூரி அருகே} தொடங்கப்பட்டிருக்கும் இந்த மருத்துவமனையின் திறப்பு விழா செப்டம்பர் 30 ஆம் தேதி விமர்சையாக நடைபெற்றது.
‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழாவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் எச்.விஹண்டே மற்றும் பத்மஸ்ரீ டாக்டர்.மேமன் சாண்டி சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு மருத்துவமனையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள்.
மருத்துவமனையின் நிறுவனர்கள் டாக்டர்.செந்தில் கணேசன், வரவேற்புரை ஆற்றினார். டாக்டர்.எஸ்.பி.கணேசன் நன்றியுரை ஆற்றினார்.
டாக்டர் எம்.என்.சதாசிவம் ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’-யின் நோக்கம் மற்றும் அதிநவீன மருத்துவம் பற்றி விளக்கமளித்தார்.
‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ பற்றி பேசிய டாக்டர்.எஸ்.பி.கணேசன், “ஹைடெக் லேப்ஸ் நிறுவனத்தை வேறு ஒரு நிறுவத்திடம் ஒப்படைத்த பிறகு மருத்துவ துறையில் புதிதாக செய்ய வேண்டும் என்று சிந்தித்தேன். அதன்படி, இரத்த கோளாறுகள் மற்றும் குறிப்பாக இரத்த புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிப்பதோடு, நோய் ஆரம்பத்திலேயே கண்டறியும் அதிநவீன தொழில்நுட்பங்கள் கூடிய மருத்துவமனையை தொடங்க முடிவு செய்து ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’-யை நிறுவியுள்ளோம்.
எங்கள் மருத்துவமனையில் திறமையான மூத்த மருத்துவர்கள் மட்டும் இன்றி, திறமையான செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை நியமித்துள்ளோம். இரத்தம் தொடர்பாக மக்களுக்கு ஏற்படும் அனைத்துவிதமான குறைபாடுகளையும் குறிப்பாக இரத்த புற்றுநோய்களை துள்ளியமாக கண்டறிந்து சிறந்த முறையில், குறைந்த கண்டனத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம், நன்றி.” என்றார்.