டிப்பர் லாரி மோதி பெண் சப்-இன்ஸ்பெக்டர் பலி

டிப்பர் லாரி மோதி பெண் சப்-இன்ஸ்பெக்டர் பலி

படப்பை: சென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார் மாங்குயில் (வயது 32). நேற்று வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் ஒரகடம் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார். படப்பையை அடுத்த சொரப்பனஞ்சேரி அருகே சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி இவரது மொபட் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி லாரிக்கு அடியில் விழுந்த அவர் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் மாங்குயில், உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதைதொடந்து லாரி டிரைவரை  கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.