ஆவடி - சென்ட்ரல் இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து

ஆவடி - சென்ட்ரல் இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் ஆவடி- அரக்கோணம் இடையே மின்சார ரயில் போக்குவரத்து நாளை முதல் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

"சென்னை சென்ட்ரலில் இருந்து திருத்தணி வரை இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி வரை ரத்து செய்யப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு ஆவடி முதல் திருத்தணி வரை இயக்கப்படுகிறது. மேலும் அரக்கோணம் முதல் சென்னை சென்ட்ரல் வரை, திருவள்ளூர் முதல் சென்னை சென்ட்ரல் வரை, பட்டாபிராம் முதல் சென்னை சென்ட்ரல் வரை, திருத்தணி முதல் சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டு ஆவடி வரை இயக்கப்படும்.

மேலும் பிற்பகல் 1.50 மணிக்கு ஆவடி முதல் பட்டாபிராம் சைடிங் வரை, காலை 9.45 மணிக்கு சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரை, காலை 11.55, 1.50, 2.25 மணிக்கு அரக்கோணம் முதல் திருத்தணி வரை, பிற்பகல் 1.15  மணிக்கு திருவள்ளூர் முதல் சென்ட்ரல் வரை, காலை 11.10 மணிக்கு ஆவடி முதல் அரக்கோணம் வரை பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.