இறைச்சிக்காக மாடுகள் விற்க தடைக்கு, தடை விதித்தது கோர்ட்

இறைச்சிக்காக மாடுகள் விற்க தடைக்கு, தடை விதித்தது கோர்ட்
Madras High court stays central ban on Beef slaughter

மதுரை: இறைச்சிக்காக மாடுகள், எருமை, காளை, கன்றுகளை விற்க மத்திய அரசு தடை விதித்திருந்தது. இந்த தடைக்கு எதிராக செல்வகோமதி, ஆஷிக் இலாகி பாபா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதில் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு விதித்த தடை சட்ட விரோதமானது என்றும் அது அரசியல் அமைப்பிற்கு எதிரானது என தெரிவித்திருந்தனர்.

இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதிக்கப்பட்டதற்கு 4 வாரம் தடை விதித்துள்ளது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Madras High court stays central ban on Beef slaughter