பிரம்மாண்ட நீர் மோர், பழச்சாறு தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா

பிரம்மாண்ட நீர் மோர், பழச்சாறு தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா

காலமெல்லாம் தமிழ் மக்களின் தாகம் தீர்த்த புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவாக பிரம்மாண்ட நீர் மோர் பழச்சாறு வழங்கும் தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா INAUGURATED by Sri.O.PANEER SELVAM DEPUTY CHIEF MINISTER ORGANISED by DR.SUNEEL.

காலமெல்லாம் தமிழ் மக்களின் தாகம் தீர்த்த

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவாக

பிரம்மாண்ட நீர் மோர் பழச்சாறு வழங்கும்

தண்ணீர்ப் பந்தல் திறப்பு விழா

ஆயிரக்கணக்கில் அலை அலையாய் வந்த

அம்மா விசுவாசிகள்

சென்னை: ஏப்ரல் 11, புதன்கிழமை (இன்று) காலை 10 மணி அளவில், பனகல் பூங்காவில், புரட்சித் தலைவி அம்மா நினைவாக, அ.இ.அ.தி.மு.க சார்பாக, மாபெரும் பிரம்மாண்டமான “தண்ணீர்ப் பந்தல்” திறப்பு விழா நடைபெற்றது. ஏறத்தாழ 2000 அம்மா விசுவாசிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அம்மாவின் உண்மை விசுவாசியும், அ.இ.அ.தி.மு.க அடிப்படைச் செயல் வீரருமாகிய “உங்களுக்காக டாக்டர் சுனில்” இந்த விழாவினை மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்து நடத்தினார். ஆண்டு தோறும் இவர் இதனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவிற்கு சென்னை தி.நகர் சட்டமன்ற உறுப்பினரும், தென் சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளருமாகிய திரு சத்யா அவர்கள் முன்னிலை வகித்தார். மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக ஒருங்கிணைப்பாளருமாகிய “ஜல்லிக்கட்டு நாயகர்” மாண்புமிகு ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் விழாவினைத் தொடங்கி வைத்து, தாகம் தீர்க்கும் பழச்சாறினை மக்களுக்கு வழங்கினார். அதன்பின்னர், தர்பூசணி, இளநீர், நொங்கு, பாதம் கீர், ரோஸ்மில்க், மோர் உள்ளிட்ட 6 வகையான குளிர்பானங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

நலத்திட்ட உதவிகளாக, சமூகத்தில் நலிந்த மக்களில் சிலருக்கு செயற்கை கால், மூன்று சக்கர சைக்கிள், தையல் இயந்திரம், அயர்ன் பாக்ஸ், மணமக்களுக்கு வாழ்க்கைத் தொடக்கத்திற்கான சீர் வரிசை பாத்திரங்கள் வழங்கப்பட்டன. பசுமைப் புரட்சியின் அடையாளமாக, பலருக்கு மரக் கன்றுகள் வழங்கப்பட்டன.

துணை முதலமைச்சர் திரு ஓ.பி.எஸ். அவர்கள் உரையாற்றுகையில், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் இலட்சியங்கள் தமிழ் மக்கள் இந்தத் தரணியில் வாழும் வரை, அ.இ.அ.தி.மு.க தொண்டர்களால் நிறைவேற்றப்படும் என்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் உறுதியாகிறது என்றும் அதனால், அனைத்து கழகத்தினரும் அளவற்ற சந்தோஷமும் வெற்றி பெருமிதமும் கொள்கின்றனர் என்று கூறினார்.

இதய தெய்வம் அம்மா அவர்கள் கட்சியினருக்கு இட்ட அன்புக் கட்டளையை, தொடர்ந்து நினைவில் கொண்டு, ஆண்டுதோறும் இத்தகைய நல உதவித் திட்டங்களை மேற்கொண்டு வரும் அம்மாவின் உண்மை விசுவாசி, தன் சேவையின் மூலம் என் இதயத்தில் இடம் பிடித்துள்ள தம்பி. உங்களுக்காக டாக்டர் சுனில் அவர்களைப் பாராட்டுகிறேன் என்றும், அவருக்கு அம்மாவின் அருளும் கடவுளின் கிருபையும் என்றும் கிடைக்க பிரார்த்திப்பதாகவும் கூறினார். இதுவரையில், தமிழகத்தில் அன்புத் தம்பி டாக்டர் சுனில் அமைத்த மிகப் பிரம்மாண்டமான தண்ணீர்ப் பந்தல் போல் வேறு எங்கும் நான் பார்த்தது இல்லை. பிரமாண்டமாக செய்து அசத்தியுள்ளார். அவர் தொடர்ந்து மக்களுக்கு உதவிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று அவரை மனதார பாராட்டுகிறேன் எனவும் குறிப்பிட்டு வாழ்த்தினார்.

நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் ஜெ.சி.டி.பிராபகர், டாக்டர் ஜெயவர்த்தன், பால்ராஜ், ராஜா, சுரேஷ் குமார், சதீஷ் குமார் ஆகியோருடன் பல்லாயிரக்கணக்கில் கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டு, அம்மாவின் உண்மை விசுவாசி உங்களுக்காக டாக்டர் சுனில் அவர்களைப் பாராட்டினர்.

விழாவின் இறுதியில், இந்த விழா நடைபெற அன்புடன் அனுமதித்த துணை முதல்வரை நினைவு கூர்ந்து டாக்டர் சுனில் நன்றி தெரிவித்தார், புரட்சித் தலைவி அம்மாவின் நம்பிக்கையை முழுமையாகச் செயல்படுத்தி வரும் கழக ஒருங்கிணைப்பாளராகிய ஜல்லிக்கட்டு நாயகர் திரு ஓ.பி.எஸ். அவர்கள் கழகத் தொண்டர்களை வழி நடத்தும் கலங்கரை விளக்கமாக உள்ளார் என்றார்.

விழா ஏற்பாடுகளில் துணை நின்ற தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் சத்யா மற்றும் கழக முன்னணித் தலைவர்கள் அனைவருக்கும் உங்களுக்காக டாக்டர் சுனில் நன்றி கூறினார். தண்ணீர்ப் பந்தல் கோடை காலம் முழுவதும் தொடர்ந்து செயல்படும் என்று அறிவித்தார்.

விழாவில், நுங்கு கனி, இளநீர், தர்பூசணி, மாம்பழம், கொய்யாப்பழம் ஆகியவை ஒவ்வொன்றும் ஒரு லாரி நிறைய கொண்டு வரப்பட்டு, மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்தக் கனிகளுடன், மோர், ஸ்ட்ராபெரி ஜூஸ், கிர்ணிப்பழச்சாறு, ஆரஞ்சு மற்றும் பைன் ஆப்பிள் ஜூஸ் ஆகியவையும் இணைந்தே வழங்கப்பட்டன.

2000 பேருக்கு மேல் இவற்றைப் பெற்று, இதனை வழங்கக் காரணமாயிருந்த அம்மாவையும் அவரின் உண்மை விசுவாசி டாக்டர் சுனில் அவர்களையும் பாராட்டிச் சென்றனர்.

தாகம் தீர்க்கும் விழா முடிந்த பின்னர், 87 ஏழைகளுக்கு ஆடைகள் மற்றும் வாழ்க்கைக்குத் தே