வாட்ஸ்அப்பில் எதிரிகளுக்கு சவால் விட்டவர் படுகொலை

வாட்ஸ்அப்பில் எதிரிகளுக்கு சவால் விட்டவர் படுகொலை

மகராஷ்டிராவில் வசித்து வந்த ரியல் எஸ்டேட் தரகர் மொயின் மெஹ்மூத் பதான் (35), இவருக்கும் மற்றொரு கும்பலுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் இருந்து வந்தது, இந்நிலையில் இவர் நேற்று மாலை வாட்ஸ் அப் மூலம் தன்னுடைய எதிரிகளுக்கு சவால் விடுத்தது உள்ளார்.

இதனை அடுத்து சிலமணிநேரத்தில் அவுரங்காபாத் நகரில் ஹர்சூல் பகுதியில் பாத்திமாநகர் என்ற இடத்தில் 20 இளைஞர்கள் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் மொயின் மெஹ்மூத் பதானை தாக்கினார், இதில் மொயின் மெஹ்மூத் பதான் மரணம் அடைந்தார், இவரை காப்பாற்ற முயன்ற மருமகன் இர்பான் ஷேக் ரகீம் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கொடூர தாக்குதல் காரணமாக போலீசார் 6 பேரை இன்று கைது செய்துள்ளனர்.