பாகுபலி பட பாணியில் யானையின் மீது ஏற முயன்ற தொழிலாளி படுகாயம்

பாகுபலி பட பாணியில் யானையின் மீது ஏற முயன்ற தொழிலாளி படுகாயம்
Man tries Baahubali stunt with elephant injured

இடுக்கி: கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா நகரில் உள்ள தோட்டத்தில் உள்ள மரத்தின் மீது இரும்பு சங்கிலியால் யானை ஒன்று கட்டப்பட்டிருந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி சாஜி (40), "பாகுபலி" திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் யானையின் தந்தங்களை பிடித்து ஏறுவது போன்று அவரும் ஏற நினைத்தார். இதற்காக யானைக்கு வாழைப்பழத்தை கொடுத்தார். அதை யானையும் வாங்கியது.

பின்னர் யானையின் அருகே சென்ற சாஜி', அதன் தந்தங்களை பிடித்து ஏற முயன்றார், அப்போது யானை அவரை தூக்கி வீசியது, இதனால் நிலைகுலைந்து போன சாஜி படுகாயம் அடைந்தார், அவரை அருகில் உள்ள மக்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Man tries Baahubali stunt with elephant injured