சென்னையில் மின்தடை: அமைச்சர் விளக்கம்

சென்னையில் மின்தடை: அமைச்சர் விளக்கம்
Minister Thangamani explains power shutdown in Chennai

சென்னை: சென்னையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை நகரத்தின் சுமார் 70 சதவீத பகுதிகளில் நேற்று மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.

மின்வெட்டின் காரணம் குறித்து மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அப்போது அவர் கூறியதாவது:

மணலி - மயிலாப்பூர் இடையிலான உயர் மின் அழுத்த பாதையில் பழுது காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது. பழுதை சீர் செய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது, மேலும் மின் தடை காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Minister Thangamani explains power shutdown in Chennai