திருமண ஆசை காட்டி சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் தந்தையுடன் கைது

திருமண ஆசை காட்டி சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் தந்தையுடன் கைது


மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கண்மாய்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த களச்சி கருப்பன் என்பவரது மகன் ராஜபிரபு கடந்த 6 மாதமாக காதலித்து வந்தார்.

அப்போது திருமணம் செய்து கொள்வதாக கூறிய ராஜபிரபு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பிணியானார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிறுமி கேட்டபோது, ராஜ பிரபு மற்றும் அவரது தந்தை களச்சி கருப்பன் ஆகியோர் மறுத்து விட்டனர்.

இது குறித்து மேலவளவு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிவு செய்து ராஜபிரபு, அவரது தந்தை களச்சி கருப்பன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.