மிஸ்பா உல் ஹக் ஓய்வு

மிஸ்பா உல் ஹக் ஓய்வு
Mishba ul Haq to retire after WI test series

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், டெஸ்ட் அணியின் கேப்டனுமான மிஸ்பா உல் ஹக் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு பிறகு ஓய்வு பெற இருப்பதாக மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

ஓய்வு முடிவு எடுக்க எனக்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க இது எனது தனிப்பட்ட முடிவு என்றும் எனது முடிவை நான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனுக்கும் தெரிவித்து விட்டேன் எனவும் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015- ஆம் ஆண்டு உலக கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து மிஸ்பா உல் ஹக் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mishba ul Haq to retire after WI test series