என்னை கிழவன் என்று என் மனைவி கேலி செய்தால்: பாலகிருஷ்ணன் வாக்குமூலம்

என்னை கிழவன் என்று என் மனைவி கேலி செய்தால்: பாலகிருஷ்ணன் வாக்குமூலம்

துணை நடிகை சந்தியாவை தனது கணவர் பாலகிருஷ்ணன் துண்டு, துண்டாகக் வெட்டி கொலை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொலை செய்ததிற்கான காரணம் குறித்து அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

என் மனைவி மீது எனக்கு எந்த அளவுக்கு பாசம், அன்பு, காதல் இருந்ததோ அதே அளவுக்கு அவர் மீது வெறுப்பு, ஆத்திரம் இருந்தது. 2000-ம் ஆண்டில் எங்களுக்கு திருமணம் நடந்தது. அவளுக்கு இப்போது 35 வயது. எனக்கு 51 வயது. அவள் நல்ல அழகு. நானோ சுமாரான அழகுதான். நான் 10-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளேன். என் மனைவி பட்டப்படிப்பு படித்துள்ளார்.

எனக்கு சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. சந்தியாவும் நடிகை ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தார். எங்களுக்கு 2 குழந்தைகள் இருந்தன. ஆனாலும் இல்லற வாழ்வு திருப்தியாக இல்லை.

எங்கள் இருவருக்கும் 16 வயது வித்தியாசம் என்பதால் கிழவனை திருமணம் செய்து வைத்துவிட்டதாக தன் பெற்றோரிடம் சந்தியா கூறி வந்தாள். படுக்கைக்கு அழைக்கும் போதெல்லாம் கிழவன் என்று கிண்டல் செய்தாள். தாம்பத்திய உறவால் அழகு சிதைந்துவிடும் என்று கூறி என்னுடன் உறவு வைத்துக் கொள்வதை நிறுத்திவிட்டாள். இதனால் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

பொங்கல் பண்டிகைக்குப் பிறகு சென்னையில்தான் நாங்கள் இருவரும் தங்கியிருந்தோம். ஆனால் அவர் சில நாள்கள் வீட்டுக்கு வரமாட்டாள். தன் விருப்பம் போல வாழ்ந்தாள். அதை தட்டிக்கேட்டால் நான் உங்களுடன் வாழ விரும்பவில்லை என விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டேனே. அதன் பிறகு என்னைக் கேள்வி கேட்க நீங்கள் யார் என்று எதிர்த்துப் பேசினாள்.

அவள் அழகாக இருப்பதை காரணம் காட்டி பல வகையில் நிராகரித்தாள். இதுதான் எனக்கும் மனைவிக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம். சந்தியாவின் ஒவ்வொரு கேள்வியும் என்னை அவமானப்படுத்தியதால் அவளை கொலை செய்த பிறகும் உடலைத் துண்டு, துண்டாகக் கூறுபோட்டேன்.’’

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.