“நம்மால் முடியும்”

“நம்மால் முடியும்”
Nammal Mudiyum New Tamil program from Puthiyathalaimurai

நம்மால் முடியும் நிகழ்ச்சி பல சமூக விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றது. நீராதார பிரச்சனைகள், மின் சிக்கன விழிப்புணர்வு, கழிப்பறை மேம்பாடு போன்ற பல்வேறு பிரச்சனைகள் பேசப்படுவதோடு தீர்வும் செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தயாரித்து தொகுத்து வழங்கி வருகிறார் சித்ரவேல்.

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்வதை அறிந்து நம்மால் முடியும் குழுவினர் சுற்றுச்சுவரில் விழிப்புணர்வு ஓவியம் வரைந்துள்ளனர்.

சென்னை கோடம்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் உள்ள சுவற்றில் பெண்களுக்கான வன்கொடுமைகளைத் தடுத்திட ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிய தலைமுறை நம்மால் முடியும் குழுவுடன் இணைந்து உதவிடத்தான் பிறந்தோம் என்ற குழுவும் பல தன்னார்வலர்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் என அனைவரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் சனிக்கிழமை பிற்பகல் 3:30​ மணிக்கும், ஞாயிறு காலை 9:00​ ​மணிக்கு மறு ஒளிபரப்பையும் காணலாம்.

Nammal Mudiyum New Tamil program from Puthiyathalaimurai