“மக்கள் மனசுல யாரு“

“மக்கள் மனசுல யாரு“
News 7 tamil new program Makkal manasula Yaaru

நியூஸ்7 தமிழில் “மக்கள் மனசுல யாரு “என்ற மாபெரும் கருத்துக்கணிப்பின் முடிவுகள் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. ரஜினி, கமல், விஜய் மூவரில் திரையுலகிலிருந்து அரசியலுக்கு அடுத்து யார் வருவார்? வந்தால் மக்களின் ஆதரவு எப்படி இருக்கும்? என்பதை அறிந்துகொள்ளும் வகையில் மாபெரும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புள்ளியியல் வல்லுநர் குழுவின் வழிகாட்டுதலின்படி வயது, பாலினம், மதம், கல்வித்தகுதி மற்றும் தொழில் அல்லது பணி அடிப்படையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் இந்த கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. நியூஸ்7 தமிழ் மற்றும் குமுதம் குழுமம் இணைந்து நடத்தும் மக்கள் மனசுல யாரு மாபெரும் கருத்துக்கணிப்புக்கான முடிவுகள் இந்தவாரம் 27, 28, 29, 30 மற்றும் டிசம்பர் 1​ ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. 

News 7 tamil new program Makkal manasula Yaaru