“டாக்டரிடம் கேளுங்கள்”

“டாக்டரிடம் கேளுங்கள்”
News7 Tamil program Doctoridam Kelungal

(ஞாயிறுதோறும் காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை)

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள், அதற்கான காரணங்கள் அதன் பின்விளைவுகள் பற்றி யாருமே சிரத்தையெடுத்துக்கொள்வதில்லை. இன்னும் பலருக்கு நோய்க்கான அறிகுறிகள் தானா அது என்பது கூட தெரிவதில்லை.

இப்படிப்பட்ட சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்களை மருத்துவர்கள் மூலமாகவே அளிக்கும் நிகழ்ச்சி "டாக்டரிடம் கேளுங்கள்".

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் புற்றுநோய், நரம்பியல், எலும்பு, மூட்டு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மருத்துவ வல்லுனர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் நேயர்கள் தங்கள் கேள்விகளை தொலைபேசி வாயிலாக கேட்டு உடனடியாக அதற்கான விளக்கங்களை நேரடியாகவே பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் வித்யாசமான பல உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், அதற்கு மருத்துவத்துறையில் தற்போது இருக்கும் அதிநவீன சிகிச்சை முறைகள் பற்றிய சந்தேகங்களுக்கும் விளக்கங்களை மருத்துவர்கள் அளிக்கின்றனர்.

"ஆரோக்கியமாக நம்மை பராமரிப்பது மட்டுமின்றி நோய்கள் வராமல் நம்மைநாமே தற்காத்துக்கொள்வது பற்றிய விழிப்புணர்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம்" என்கிறார் இந்த நிகழ்ச்சியை தயாரித்து, தொகுத்து வழங்கும் மனோஜ்.

இந்த நிகழ்ச்சி தயாரித்து தொகுத்து வழங்குபவர் மனோஜ்.

News7 Tamil program Doctoridam Kelungal