உளவுப் பார்வை

உளவுப் பார்வை
News7 Tamil program Ulavu Parvai

(ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10:00 மணிக்கு)

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி "உளவுப் பார்வை" இதில், சமூகத்தில் மறைக்கப்பட்ட பிரச்னைகள் ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தப்படுகிறது.

கல்விக் கட்டணக் கொள்ளை, கரகக் கலைஞர்களின் வாழ்வும் வலியும், உறைய வைக்கும் உடல் உறுப்புக் கொள்ளை, சென்னையில் பெருகி வரும் போதைப் பொருள் விற்பனை, திருநங்கைகளின் நிலை, பாலியல் தொழிலாளர்களின் வலி ஆகியவற்றை புலனாய்வு செய்து ஆதாரத்துடன் கடந்த வாரங்களில் ஆவணப்படுத்தியது இந்நிகழ்ச்சி. இன்னும் பல சமூகப் பிரச்னைகளை அதன் அனைத்துப் பரிமாணங்களோடும் பேச இருக்கிறது இந்நிகழ்ச்சி.

சென்னையில் இரவு என்று ஒன்று இல்லாவிட்டால் பகல் ஒன்று விடியாது. சென்னையை தூய்மை படுத்தும் துப்புரவாளர்கள் பணி, அத்தியாவசியமான உணவான பால் விநியோகம், நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள பத்திரிக்கை விநியோகம், வெளிமாநிலங்களிலிருந்து வரும் காய்கறிகளின் இறக்குமதி என தொழிலாளாளர்களின் உழைப்பு ஒரு பக்கம் இருக்க, இரவு நேரங்களில் நடக்கும் சமூக விரோதிகளின் நடமாட்டம், போதை பொருட்கள் கடத்தல் போன்ற குற்றங்களை தடுக்க இரவு பகலாக கண் விழித்து பணியாற்றும் காவல் துறை இப்படி இரவு வேலை இயங்கவில்லை என்றால் பகல் விடியாது. மொத்தத்தில் சென்னை தூங்கவில்லை ஆயிரம் கண்களுடன் விழித்திருக்கிறது என்பதை இந்த வார உளவுப்பார்வை நிகழ்ச்சியில் காணலாம், இந்நிகழ்ச்சியை தயாரித்து தொகுத்து வழங்குகிறார் சாந்தி.

வழக்கமான நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் ஆதாரங்களுடன் சிக்கலான பிரச்னைகளை பெரும் சவால்களுடன் பேசும் இந்நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 10:00 மணிக்கும் மறுஒளிபரப்பு ஞாயிறு இரவு 10:00 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

News7 Tamil program Ulavu Parvai