“சினிமேக்ஸ்”

“சினிமேக்ஸ்”

நியூஸ்7 தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “சினிமேக்ஸ்” .. சினிமேக்ஸ் என்றால் சினிமா மேக்சிமம். இந்நிகழ்ச்சி தினமும் இரவு 11:00 மணிக்கும் இதன் மறுஒளிபரப்பு அடுத்த நாள் மாலை 5:30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது .

இதில் பாப்கார்ன் என்ற பகுதியில் நமது தமிழ் சினிமாவின் செய்திகள், நிகழ்ச்சிகள் அனைத்தும் இடம்பெறும். இது தவிர பி டி எம் என்கிற பகுதியில் அதாவது பாலிவுட் டோலிவுட் மல்லுவுட் எனப்படுகிற மூன்று திரை உலகங்களை சேர்ந்த தகவல்கள் இந்த பகுதியில் இடம்பெறும்.

அதேபோல ஸ்டாரும் காரும் என்ற பகுதியில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உபயோகப்படுத்திய கார் பற்றியும் அதற்கு 4777 எப்படி வந்தது என்பது பற்றியும் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் கிளாசிக் தருணங்கள் என்கிற இன்னொரு பகுதியும் இதில் இடம்பெறுகிறது. இதில் பிரபல இயக்குனர்கள் தங்களது திரையுலக பயணத்தில் நிகழ்ந்த சில முக்கிய தருணங்கள் பற்றி கூறுகிறார்கள். இயக்குனர் பாண்டியராஜன் தான் இயக்கிய ஆண்பாவம் படத்தில் வாய் பேச முடியாத ஒரு ஊமை கதாபாத்திரத்தை படைத்து, அந்த கதாபாத்திரத்தை உலகம் முழுக்க பேச வைத்ததையும் பிறவி ஊமையாக இருந்த  ஒருவரை  அந்த படத்தில் டாக்டராகி  அவருக்கு டப்பிங் கொடுத்து  பேச வைத்ததையும் அந்த படம் பார்த்துவிட்டு தனது மனைவி, தாய் ஆகியோர் கண்ணீர்விட்டு அழுத நிகழ்வையும் பற்றி கூறியுள்ளார்