"இது தேர்தல் நேரம்"

"இது தேர்தல் நேரம்"

இந்தியாவின் மாபெரும் ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகளின் கொள்கை, கூட்டணி நிலைப்பாடு, அவர்களுக்காக மக்கள் ஆதரவுத் தளம், கடந்த தேர்தலில் கட்சிகளின் சார்பாக வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் அறிக்கைகள் ஆகியவற்றை அலசுகிறது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் இது தேர்தல் நேரம் நிகழ்ச்சி.

வாரத்தின் ஏழு நாட்களிலும் மாலை 6.00 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சியின் சுவாரஸ்ய அம்சங்களாக தேர்தல தெரிஞ்சுக்குவோம், தேர்தல் கிசுகிசு, வட்டத்துக்கு வெளியே, பாலிடிக்ஸ் பேசலாமா ? தேர்தல் ஸ்டண்ட், இந்த தொகுதி யாருக்கு பலம்? ஆகிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியை நியுஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் துணை ஆசிரியர் சுகிதா, செய்தியாளர் மிருணாளினி ஆகியோர் தொகுத்து வழங்க தினேஷ் தயாரிக்கிறார்.