பிரதமர் மோடி நாளை உண்ணாவிரதம்

பிரதமர் மோடி நாளை உண்ணாவிரதம்
PM Modi to lead BJP fast tomorrow

புது டெல்லி: நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வை எதிர்க்கட்சிகள் முற்றிலும் முடக்கின. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழக்க கோரி தெலுங்கு தேசம் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகளும் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை, மாநிலங்களவை பெரும்பாலும் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எந்த விதமான பணிகளும் நடைபெறாமல் முடிவடைந்த நிலையில், இந்த நாடாளுமன்ற முடக்கத்திற்கு காரணமான காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நாளை பா.ஜ.க எம்பி-க்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர்', இந்த உண்ணாவிரதத்தில் மோடி - அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்க உள்ளனர்.

PM Modi to lead BJP fast tomorrow