பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்

பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்
Paarivendhar Students Tamil Association

பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம் இரண்டாம் ஆண்டு விழா செய்தியறிக்கை

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் கீழ் செயல்படும் அமைப்பு பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம். தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை மாணவர்கள் உணருவதற்கும், அவர்களிடம் உள்ள பல்வேறு திறன்களை வெளிப்படுத்த வாய்ப்பளிப்பதற்கும் பயன்படும் வகையில் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் அவர்களால் இரண்டாண்டுகளுக்கு முன்பு இம்மன்றம் தோற்றுவிக்கப்பட்டது. கடந்த இரண்டாண்டில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பல மாணவர் மாணவிகள் பங்கேற்றிருப்பதோடு மாநிலமெங்கும் பல்வேறு அமைப்புகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்றுப் பரிசு பெற்றுள்ளார்கள்.

ஆண்டு விழா கொண்டாடுவதையொட்டிப் பல்வேறு போட்டிகள் 23.09.2017 அன்று நடத்தப்பட்டன. அதில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஆர்வமாய்ப் பங்கேற்றனர். 26.09.2017 அன்று காலை 10.30 மணியளவில் மருத்துவக் கல்லூரிக் கலையரங்கில் ஆண்டு விழா நடைபெற்றது. தமிழ்பபேராயத்தின் தலைவரும், பல்கலைக்கழகத்தின் இணைத் துணைவேந்தருமான முனைவர் தி.பொ. கணேசன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில் ஆராய்ச்சிப்புலத் தலைவர் முனைவர் கசிமீர் ராசா வாழ்த்துரை வழங்கினார். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர் மாணவியர்களுக்குப் பரிசுகளை வழங்கி நிறுவன வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் விழாவில் பேருரை ஆற்றினார். ‘வேந்தர் நெறி’ சிறப்பு மலரை வெளியிட்டு திரைப்பட இயக்குநர் எஸ். பி. முத்துராமன் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக மாணவர்கள் பங்கேற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பல்வேறு புலங்களைச் சேர்ந்த இயக்குநர்கள், புலத்தலைவர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்ற அவ்விழாவில் பெருமளவில் மாணவர் மாணவியர் கலந்துகொண்டனர்.

Paarivendhar Students Tamil Association

[usercontrol: ~/user controls/gallery.ascx ImageUrl=/img/others/SRM-26-09-17]