ஓ. பன்னீர்செல்வம் சொல்வதெல்லாம் உண்மையல்ல

ஓ. பன்னீர்செல்வம் சொல்வதெல்லாம் உண்மையல்ல
Panneerselvams speech were not true Jayakumar

சென்னை: அ.தி.மு.க நிதியமைச்சர் ஜெயகுமார் இன்று நிருபர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது:

ஓ. பன்னீர்செல்வத்தின் நிர்பந்தம் காரணமாக சசிகலா, தினகரனின் குடும்பத்தை விலக்கி வைக்கவில்லை. அ.தி.மு.க அமைச்சர்கள் அனைவரும் ஒன்று கூடி கட்சியின் நலனுக்காக தான் அவர்களை ஒதுக்கி வைத்தோம்.

சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து விலக்கியது தனது தர்மயுத்தத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி என ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளாரே என நிருபர்கள் கேட்டனர்.

அதற்குப் பதில் அளித்துப் பேசிய ஜெயக்குமார், "கொஞ்சம் விட்டால், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றதற்கே நான் தான் காரணம் என்றுகூட பன்னீர்செல்வம் கூறுவார்". அவர் சொல்வதெல்லாம் உண்மையல்ல என்று அவர் கூறினார்.

Panneerselvams speech were not true Jayakumar