“உலகச் செய்திகள்”

“உலகச் செய்திகள்”
Peppers TV World News program getting huge response

வாரந்தோறும் சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகும் “உலகச் செய்திகள்” நிகழ்ச்சி மக்கள் மனதில் சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கிறது. மற்றச் சேனல்களில் ஒளிபரப்பப்படும் உலகச் செய்திகளுக்கும் வேந்தர் டிவியில் ஒளிபரப்பப்படும் உலகச் செய்திகளுக்கும் தரத்திலும் துல்லியத்திலும் நிறைய வேறுபாடு இருப்பதே இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

வாரம் முழுவதும் உலகில் நடக்கும் சுவராஸ்யமான, புதுமையான மற்றும்.வித்தியாசமான நிகழ்வுகளைத் தொகுத்து அது நேயர்களுக்குப் புரியும் வண்ணம் கதைபோல் சொல்லி தெளிவு படுத்துகிறார்கள். இதுவும் வேந்தர் டிவியின் உலகச் செய்திகள் மக்கள் மனதில் இடம்பெற முக்கியக் காரணமாக விளங்குகிறது. மேலும் அனைத்து மக்களுக்கும் பயனுள்ள இசை திருவிழா, உணவுத்திருவிழா மற்றும் அருங்காட்சியகம் சார்ந்த தகவல்களும் அளிக்கப்படுகின்றன. சிறியதாக இருந்தாலும் சுவராஸ்யத்துடன் வியப்பும் ஆச்சிரியமும் நிறைந்த செய்திகள் பகிரப்படுகின்றன.

இச்செய்தியைப் பார்க்கும் போது வித்தியாசமான அனுபவம் ஏற்படுவதற்கானக் காரணம், நவீன தொழில்நுட்ப ஜிம்மி கேமராவில் நிகழ்ச்சிகளை அழகாகத் தருவதே ஆகும். உலகச் செய்தியைத் தொகுத்து வழங்கும் சுகன்யா மனோகரனும் தன் திறமையை அழகாக வெளிப்படுத்துகிறார். இவ்வாறு அனைத்து உலக நிகழ்வுகளையும் அற்புதமாக உருவகப்படுத்தி மக்கள். மத்தியில் நீங்காத இடம்பெற்றிருக்கிறது வேந்தர் டி.வி.

இவ்வாறு அதிசயங்கள் நிறைந்த பரவசமூட்டும் அரிய செய்திகளை வீட்டின் முற்றத்திற்கே வந்து உலகச் செய்திகளாக வாரம் தோறும் சனி காலை 10.00 மணிக்கு வழங்கிவருகிறது வேந்தர் டிவி.

Peppers TV World News program getting huge response