பெப்பர்ஸ் டிவி - தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் 2019

பெப்பர்ஸ் டிவி - தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் 2019

* காலை 08.30 மணி ; புத்தாண்டு பலன்கள் - காழியூர் நாராயணன்

புதிதாக பிறந்துள்ள தமிழ் வருடமான விகாரி வருடத்திற்கான 12 ராசிகளுக்குமான பலன்களை மிகத் துல்லியமாக தொகுத்து வழங்குகிறார் தமிழ்நாட்டின் மிகப் பிரபலமான ஜோதிடரான காழியூர் நாராயணன்.

* காலை 09.00 மணி ; ஒரு நிமிஷம் தமிழ்ல பேசுங்க.. (காமெடி கலக்கல்)

சின்னத்திரையில் காமெடியில் கலக்கி வரும் முல்லை, சின்னத்திரை நட்சத்திரங்களை சந்தித்து ஒரு நிமிடம் தமிழில் பேசுங்க என்று கூறி அவர்கள் தமிழில் தொடர்ந்து பேசமுடியாமல் தவிப்பதை ஒரு அழகான நகைச்சுவை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்குகிறார் இதில் சின்னத்திரை நட்சத்திரங்கள் சிந்து மற்றும் இருவர் பங்கேற்கின்றனர்.

* காலை 09.30 மணி ; எங்க ஏரியா உள்ள வாங்க..

ஆர்.கே. நகர் படக்குழுவினருடன் ஒரு கூல் சாட் . இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஆர்.கே.நகர் படத்தின் இரண்டு கதாநாயகர்கள், இரண்டு கதாநாயகிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இது. இதில் ஆர்.கே.நகர் படம் கலகலப்பாக உருவான விதம், வெங்கட்பிரபு இந்த படத்தை தயாரித்தற்கான பின்னணி, வெங்கட்பிரபுவுக்கும் தங்களுக்கும் உண்டான நெருக்கம், இந்த படம் எப்படி வந்திருக்கிறது என்கிற சுவாரசியமான நிகழ்வுகள் பற்றி இவர்கள் மனம் திறந்து பேசுகிறார்கள்.

* காலை 10.00 மணி ; நகரமும் கிராமமும் சேர்ந்து கலக்கும் சூப்பர் கானா

* காலை 11;00 மணி ; ஸ்பெஷல் பா

 * காலை 11.30 மணி ; கேங்ஸ் ஆப் மெட்ராஸ் ஒரு ஸ்பெஷல் கவரேஜ்

வித்தியாசமான கதைகளை தயாரிப்பவரும் இயக்குனருமான சி.வி.குமார் தற்போது தயாரித்து இயக்கியுள்ள கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் படம் உருவான விதம் குறித்து பேசுகிறார். மேலும் அந்த படத்தை வெளியிடுவதற்கான திட்டங்கள், புதுப்புது இயக்குனர்களை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள், அவரது எதிர்கால திட்டம் என்ன என்பதையெல்லாம் விலாவாரியாக பகிர்ந்து கொல்கிறார் சி.வி.குமார். இந்த நிகழ்ச்சியில் கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ் படத்தின் ஹீரோ, ஹீரோயினும் பங்கேற்கின்றனர்