ஃபார்வேட் ஃபிலிம் நியூஸ்

ஃபார்வேட் ஃபிலிம் நியூஸ்

இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 7.30 மணி அளவில் பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.. கோடம்பக்கத்தில் திரைப்பட பூஜைகள், இசை வெளியீட்டு விழாக்கள், பத்திரிகையாளர் சந்திப்பு என இப்படி பல நிகழ்ச்சிகள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன.

இருந்தாலும், திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறக்கூடிய அனைத்து திரைப்பட நிகழ்வுகளிலும் முக்கியமான அம்சங்களை எவையும் விடுபடாமல் தொகுத்து இந்த நிகழ்ச்சியை வழங்குகிறார்கள். இந்த நிகழ்ச்சியை சுவைபட தொகுத்து வழங்குகிறார் கனிமொழி.

பல நிகழ்ச்சிகளில் இருந்து சுவையான விஷயங்களை பார்வையாளர்களுக்கு போரடிக்காத வகையில் படத்தொகுப்பு செய்து விறுவிறுப்பாக தருவதுதான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.. இதனாலேயே பெப்பர்ஸ் டிவியில் மிக முக்கிய நிகழ்ச்சியாக இந்த ஃபார்வேட் ஃபிலிம் நியூஸ் இடம்பிடித்துள்ளது.