பெட்ரோல் விலை குறைப்பு

பெட்ரோல் விலை குறைப்பு
Petrol Diesel price reduced

புதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வந்தன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டது.

இன்று முதல் நாள்தோறும் விலையை மாற்றி அமைக்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பை நேற்று வெளியிட்டன. இதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.20 ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.24 ம் குறைக்கப்படுகிறது.

அதன்படி, சென்னையில் ரூ.69.93 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, ரூ.68.02 ஆக குறைகிறது. டீசல் விலை ரூ.59.22 ல் இருந்து ரூ.57.41 ஆக குறைகிறது.

இன்று காலை 6 மணிமுதல் நாளை காலை 6 மணிவரை இந்த விலை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Petrol Diesel price reduced