போத்தீஸ் சாமுத்ரிகா பட்டு நெசவாளர்கள் கெளரவிப்பு விழா

போத்தீஸ் சாமுத்ரிகா பட்டு நெசவாளர்கள் கெளரவிப்பு விழா

போத்தீஸ் சாமுத்ரிகா பட்டு நெசவாளர்கள் கெளரவிப்பு விழா மற்றும் இளம் சாதனைப் பெண்கள் கெளரவிப்பு விழா

பாரம்பரிய நெசவு பணியினை பாதுகாக்க எண்ணற்ற பங்களிப்பு அளித்த திறமையான 50 கைவினை நெசவாளர்களை கெளரவிப்பதில் போத்தீஸ் பெருமை கொள்கிறது. இந்த நெசவாளர்கள் பல தலைமுறைகளாக பட்டு நெய்தலில் பிரசித்து பெற்றுள்ளனர். நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக, வெவ்வேறு துறைகளில் சார்ந்த இளம் சாதனைப் பெண்களையும், கலை, தொழில் துறை, ஊடகம், விளையாட்டு மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண் சாதனையாளர்களை போத்தீஸ் கெளரவிக்க உள்ளது.

40 வருடங்களுக்கு மேலாக ஜவுளி விற்பனையிலும், 95 வருடங்களுக்கு மேலாக நெசவு செய்வதிலும் அனுபவம் பெற்றுள்ள போத்தீஸ், தென் இந்தியாவின் ஜவுளி மற்றும் ரெடிமேட் ஆடைகளுக்கான முன்னனி பிராண்டாக இருந்து வருகிறது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, ஶ்ரீவில்லிபுத்தூர், நாகர்கோயில், பாண்டிச்சேரி, திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் போத்தீஸின் 13 கிளைகள் உள்ளன. பெங்களூரு, கொச்சி, சேலம், காஞ்சிபுரம் போன்ற நகரங்களில் புதிய கிளைகள் திறக்கப்பட உள்ளன.

ஜவுளி விற்பனையில் பிரசித்து பெற்று விளங்கும் போத்தீஸ், சாமுத்ரிகா, பரம்பரா, வஸ்த்ர கலா, மயூரி, வஸுந்தரா போன்ற பிராண்டுகளை அறிமுகம் செய்துள்ளது. திருமணப்பட்டு என்றவுடன், அனைவருக்கும் சாமுத்ரிகா பட்டு நினைவுக்கு வருவது தனி சிறப்பம்சம் ஆகும்.

இளம் சாதனை பெண்கள் கெளரவிப்பு விழாவில் பாராட்டவிருக்கும் ஆறு சாதனையாளர்களின் விவரம் பின்வருமாறு

1. மாதங்கி குமார்

சென்னையை சேர்ந்த உணவக உரிமையாளர் மாதங்கி குமார், அடையாரில் இருக்கும் 'தட் மெட்ராஸ் ப்லேஸ்', ஆழ்வார்பேட்டையில் உள்ள 'தி சம்மர் ஹவுஸ் ஈட்டரி' போன்ற உணவகங்களின் தலைமை செஃப் மற்றும் நிர்வாக பங்குதாரராக உள்ளார். பி.காம் விற்பனை மேலாண்மை, முதுகலை வணிக நிர்வாகம் படித்துவிட்டு, “லே கார்டன் ப்ளியூகலினரி ஸ்கூல் ஆப் லண்டன்” இல் “பிரெஞ்சு க்யூசைன்” யில் சிறப்பு பட்டம் படித்துள்ளார். சென்னையை சேர்ந்த க்ரியா சக்தி நாடக குழுவின் பங்குதாரராகவும் இருக்கிறார். ஈஸ்ட் கோஸ்ட் அட் மெட்ராஸ் ஸ்குயர் மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த “ஃபுட் ட்ரக்”(டேஸி பானி) போன்ற இடத்தில் ஹாஸ்பிடாலிட்டி கன்சல்டண்ட்டாக இருக்கிறார். தன்னடைய சிறந்த பணிகளுக்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.

2. ஹரினி ஜீவிதா

நடன இயக்குநர் மற்றும் இந்திய பாரம்பரிய நாட்டியர்ஹரினி ஜீவிதா. ஶ்ரீ தேவி நித்ராலையா, ஷீலா உன்னி கிருஷ்ணனின் சீடரான இவர், ஆறு வயதில் தன்னுடைய நடன பயணத்தை தொடங்கினார். பரதநாட்டியம் மெலட்டூர் பாணியில் தனித்து விளங்கும் சிறப்புக்குரியவர். 2009 ஆம் ஆண்டு, சிறப்பு மிக்க நேஷனல் பால் பவன் வழங்கும் 'பால்ஶ்ரீ' பட்டம் பெற்றார். இந்தியாவில் நடக்கும் பல முன்னனி விழாக்களிலும், உலகெங்கும் இருக்கும் கலாச்சார பன்முக நகரங்களிலும் நடனம் நிகழ்த்தியுள்ளார்.

3. ப்ரியா பவானி ஷங்கர்

திரைப்பட நடிகர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர். இன்போசிஸில் குறைந்த காலம் பணியாற்றிய பின்பு,  ‘புதிய தலைமுறை’ தமிழ் சேனலில் செய்தி வாசிப்பாளராக 2011 ஆம் ஆண்டு பணியாற்ற தொடங்கினார். பின்னர், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும், நாடகங்களிலும் நடிக்க தொடங்கினார்.

4. ஸ்வேதா ஶ்ரீதர்

வழக்கறிஞர் மற்றும் மாடல். வழக்கறிஞர் படிப்பை முடித்துள்ள இவர், நல்லி, ஜபோங், அருண் ஐஸ் க்ரீம், பாராசூட், என்.ஏ.சி ஜூவல்லர்ஸ் போன்ற பிராண்டுகளின் மாடல் முகமாக உள்ளார். இந்தியாவின் சிறந்த ஆடை வடிவமைப்பாளர்களான விவேக் கருணாகரன், ரெஹானே, சிட்னி சால்டன் ஆகியோருடன் பணியாற்றியுள்ளார். கொரியாவில் நடைப்பெற்ற 'மிஸ் யூனிவர்சிட்டி' போட்டியில் இரண்டாம் இடம் வென்றுள்ளார்.

5. அதித்தி ராஜகோபால்

அதித்தி ராஜக்கோபால், சென்னை பி.எஸ் சீனியர் செகண்டரி பள்ளியில் படித்தவர். அவர் 18 வயது இளம் தேசிய கால்பந்து வீரர். 2011ஆம் ஆண்டு முதல் மாவட்ட, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் 14, 16 மற்றும்19 வயது பிரிவில் பள்ளியின் சார்பில் பங்கேற்று பல சாதனைகளை புரிந்துள்ளார். அமெரிக்கா, டென்மார்க் மற்றும் வங்காளதேசத்தில் நடைப்பெற்ற போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றுள்ளார்.

6. ஷரண்யா ஶ்ரீநிவாஸ்

தென் இந்திய இசை தளத்தில் வளர்ந்து வரும் இளம் பாடகிஷரண்யா ஸ்ரீநிவாஸ். தன் குரல் வளத்தாள் பல பாராட்டுகளை பெற்று வரும் இவர், “மொசார்ட் ஆப் மெட்ராஸ்” ஏ ஆர் ரகுமான் அவர்களுக்காக பாடிய இரண்டு பாடல்கள் அவரது இசை பயணத்தில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தமிழ் திரை உலகின் பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருவதுடன் பல நேரலை நிகழ்ச்சிகளையும், பல மேடைகளிலும் பாடிவருகிறார். மேலும் இவர் கர்நாட்டிக்,ஹிந்துஸ்தானி இசைமற்றும் பல வகையான இசை துணுக்குகளையும் கற்று வருகிறார்