'பர்வின் டிராவல்ஸ்'!

'பர்வின் டிராவல்ஸ்'!
Praveen Travels announces its new initiative

பெண்களுக்கு பாதுகாப்பான பயணத்தை தரும் 'பர்வின் டிராவல்ஸ்'!

பர்வின் டிராவல்ஸ் தென்னிந்தியாவில் மக்களால் விரும்பப்படுகிற ஒரு டிராவல்ஸ் நிறுவனம். இப்பொழுது ஒரு படி மேலும் முன்னேறி பெண்களின் பாதுகாப்புக்கும் மற்றும் சலுகைக்கும் ஏற்றவாறு புதிய வாகனத்தை பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

பர்வின் டிராவல்ஸ் நிறுவனம் RED BUS நிறுவனத்துடன் இணைத்து இத்திட்டத்தை பயன்பாட்டிற்கு அளிக்க இருக்கிறது. RED BUS நிறுவனம் இவர்களின் பல முயற்சிகளுக்கு ஆதரவளித்து வருகிறது.

பெண்களின் தேவையை புரிந்து கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம், பண்டிகை காலம் மற்றும் திருவிழா காலங்களில் பெண்கள் சுலபமாக பயன்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். இதை முதலில் மதுரை மாநகரில் தொடங்கி, பின்னர் அனைத்து முக்கிய வழித்தடங்களுக்கும் இயக்க உள்ளது.

குறிக்கோள்:

* மகளிர்கான சிறப்பு பேருந்து

* பெண்களுக்கு மரியாதை அளிப்பதின் முக்கியத்துவம் கருதி இந்த சிறப்பு பேருந்து இயக்கபடுகிறது.

* பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட வாகனம்.

விரிவான ஆராய்ச்சிக்கு பிறகு, பர்வின் டிராவல்ஸ் நிறுவனம் பெண்களுக்கு, பாதுகாப்பான பயணத்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை வகுத்துள்ளார்கள்.

சிறப்பம்சங்கள்:

* சரிபார்க்கப்பட்ட பயிற்சி குழுவினர்.

* பயணம் தொடங்கும் முன் ஓட்டுனரின் விவரங்கள் பயணிகளுக்கு வழங்கப்படும்.

* அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கண்காணிப்பு

* அனைத்து வாகனங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு.

* பெண்களுக்கான இருக்கையில் முன்னுரிமை.

* இந்த வாகனத்தின் தகவல்களும், விழிப்புணர்வும் எங்களது இணயதளத்தில் நீங்கள் காணலாம்.

Praveen Travels announces its new initiative