நோக்கியா 5 செல்போன்களுக்கான முன்பதிவு

நோக்கியா 5 செல்போன்களுக்கான முன்பதிவு

சென்னை,இந்தியா,10ஆகஸ்ட்,2017- நோக்கியா போன்களின் தாயகமான எச்.எம்.டி க்ளோபெல் நிறுவனம் பூர்விகாவுடன் இணைந்து நோக்கியா 5 செல்போன்களுக்கான முன்பதிவை சென்னையில் இன்று தொடங்குகிறது. மொபைல் போன் பயன்பாட்டாளர்களின் கைகளில் அழகுற தவழும் வகையில் நோக்கியா 5 மொபைல் போன் கையடக்கமாக, ஒல்லியான அமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நோக்கியா 5 செல்போனின் பொறியியல் தொழில்நுட்பம் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டதாகும். இதில், 5.2 அங்குலம் கொண்ட ஐபிஎஸ் எச்.டி., திரை, எளிதில் உடைந்து விடாத கொரில்லா கண்ணாடி ஆகிய சிறப்புகளைக் கொண்டிருக்கிறது. மேலும், இதில் நீண்ட நேரத்துக்கு மொபைல் போனை பயன்படுத்தும் வகையிலான பேட்டரி உபயோகப்படுத்தப்படுகிறது. இந்தப் புதிய மொபைல் போனில் இப்போதைய ஆன்ட்ராய்டு அம்சமான 7.1.1 பயன்படுத்தப்படுவதால் வாடிக்கையாளர்கள் மிகச்சிறந்த ஆன்ட்ராய்டு அனுபவத்தைப் பெற முடியும்.

நோக்கியா 5 செல்போனை நாடு முழுவதும் உள்ள முன்னணி சில்லறை விற்பனைக் கடைகளில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும். இதன் விலை ரூ.12,899 ஆகும். இந்த மொபைல் போனை பூர்விகா மொபைல் கடைகளில் இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம். நோக்கியா 5 செல்போன், மேட்டி கருப்பு, வெள்ளி, அடர் நீலம், காப்பர் ஆகிய நிறங்களில் விற்பனைக்குக் கிடைக்கும். செல்போன் அறிமுகப்படுத்தப்படும் போது அது கருப்பு நிறத்தில் கிடைக்கும். வரும் வாரங்களில் பிற மூன்று நிறங்களிலும் விற்பனைக்கு வரும்.

இதுகுறித்து, எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் (தெற்கு மற்றும் மேற்கு) பொது மேலாளர் திரு டி.எஸ்.ஸ்ரீதர் கூறியதாவது:-

ஸ்மார்ட்போன்களின் பயன்பாடுகளும், சேவைகள் உயர்ந்துள்ள நிலையில் எங்களது செல்போன்களை வாடிக்கையாளர்கள் தங்களது கைகளில் நீண்ட நேரம் வைத்திருக்க வேண்டுமென விரும்புகிறோம். மக்கள் தங்களது கைகளில் ஏதாவது வைத்திருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். எங்காவது தொலைவில் சென்றாலும் உடன் கையில் எடுத்துச் செல்ல விருப்பம் தெரிவிக்கிறார்கள். இதனை மனதில் கொண்டு நோக்கியா 5 செல்போனை சட்டைப் பையில் வைக்கும் அளவுக்கு 5.2 அங்குலத்தில் மெல்லிய வடிவமைப்பிலும், கைகளில் நீண்ட நேரம் வைத்திருக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

பூர்விகா மொபைல்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் யுவராஜ் நடராஜ் கூறியதாவது:-

நோக்கியா நிறுவனத்துடன் நாங்கள் நீண்டகால உறவினைக் கொண்டிருக்கிறோம். இந்த உறவுகள் ஆண்டாண்டு காலமாக உயர்ந்து கொண்டே வருகின்றன. இப்போது அறிமுகப்படுத்தப்படும் நோக்கியா 5 செல்போன் வாடிக்கையாளர்களிடையே குறிப்பிடத்தக்க பூரிப்பையும், பரவசத்தையும் ஏற்படுத்தும் என நம்புகிறோம். தரம், நம்பகத்தன்மை மற்றும் வடிவமைப்புத்திறனில் முத்திரை பதிக்கும் நோக்கியா நிறுவத்தின் ஸ்மார்ட்போன்களுக்காக வாடிக்கையாளர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்றார்.

நோக்கியா செல்போனில் பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 13 எம்பி திறனுடன் தானியங்கி முறையிலான காமிராவானது, செல்போனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள பிளாஷ் அம்சமானது அனைத்து வெளிச்ச நிலைகளிலும் தெளிவான படங்களை எடுக்கலாம். குறிப்பாக குறைவான வெளிச்ச சூழலிலும் துல்லியமான படங்களை எடுக்கலாம். அறைகளிலும், வெளிப்புறங்களிலும் எந்தத் தன்மையும் மாறாமல் சூழலை அப்படியே படம் பிடிக்க முடியும்.

தெளிவான ஆன்ட்ராய்டு அனுபவம்:

நோக்கியா செல்போனை பயன்படுத்தும் போது தெளிவான ஆன்ட்ராய்டு அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெற முடியும். இப்போது ஆன்ட்ராய்டு அம்சங்களுடன் செல்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. இது, பேட்டரியின் ஆயுட்காலத்தை நீட்டிக்கச் செய்யும். மேலும் நோக்கியா 5 செல்போனில் பயோ-மெட்ரிக் அடிப்படையில் விரல் ரேகை பாதுகாப்பு அம்சம் உள்ளது. இதனால், வாடிக்கையாளர்களின் செல்போன்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. நோக்கியா 5 செல்போனில் உள்ள சிறப்பு அம்சங்கள் அனைத்தும் கூகுள் நிறுவனத்தின் தற்கால புதுயுக சிந்தனையில் உதித்தவை ஆகும். கூகுள் உதவி அம்சமானது செல்போனில் இணைக்கப்பட்டுள்ளது. இதனுடன் உரையாடல்களை நிகழ்த்தி நோக்கியா ஸ்மார்ட்போன்களை எளிதாகக் கையாளலாம். மேலும், செல்போனில் 8 எம்பி, 84 டிகிரி பரந்துபட்ட முன்புற கேமிரா என பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதனால் உங்கள் செல்பி படங்களை மிகச்சிறந்த முறையில் எடுத்திட முடியும்.

சலுகைகள்:

நோக்கியா 5 செல்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மாதத்துக்கு 5 ஜிபி இணையதள டேட்டா மூன்று மாதங்களுக்குக் கிடைத்திடும். மேலும், ரூ.2,500 மதிப்புள்ள சலுகை மேக்மைட்ரிப்.காம் வழியாகக் கிடைத்திடும். அதாவது, இந்த இணையதளத்தை பயன்படுத்துவோருக்கு ரூ.1,800-க்கு ஓட்டலில் தங்கவும், ரூ.700-க்கு உள்ளூர் விமான டிக்கெட்டிலும் சலுகை அளிக்கப்படும்.

Pre bookings for Nokia 5 start           </div>

          <!--Optional Url Button -->
          
          <!--Optional Url Button -->
          
          <div class=