ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தினால் போராட்டம் நடத்துவோம்: விக்கிர

ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தினால் போராட்டம் நடத்துவோம்:  விக்கிர
Protest will be conducted if GST tax implemented Vikramaraja

திருச்சி: ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ஜூலை 1-ல் அமல்படுத்தக் கூடாது. வரி விதிப்பால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். பொதுமக்கள் விலைவாசி உயர்வை சந்திக்க நேரிடும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா மனு அளித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, அன்றாடம் பொதுமக்கள் பயன்படுத்தும் மசாலா பொருட்களுக்கு ஏற்கனவே 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்தது. தற்போது ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் 28 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனால் 23 சதவீதம் விலை ஏறியிருக்கிறது. விலைவாசி உயரும் என்பதில் சந்தேகமில்லை.

நாங்கள் வருகிற 20-ந் தேதிக்கு மேல் டெல்லி சென்று நிதியமைச்சர், பிரதமரை சந்திக்க முயற்சித்து வருகிறோம். ஜூலை 1-ல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தினால் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்துவோம்.

இந்த நிலையில் இது குறித்து தமிழக நிதியமைச்சர் மற்றும் முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அவர்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதாக கூறியுள்ளனர். அகில இந்திய அளவில் வருகிற 20-ந்தேதி கர்நாடகாவில் அகில இந்திய வணிகர் சம்மேளனம் சார்பாக கூட்டம் நடக்கிறது. அதில் போராட்டம் குறித்து வழிமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Protest will be conducted if GST tax implemented Vikramaraja