“அகம் புறம் களம்”

“அகம் புறம் களம்”

“அகம் புறம் களம்” என்பது புத்தம் புதிய அரசியல் நிகழ்ச்சி! தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் வேளையில் அரசியலைப் பற்றி மக்கள் ஆழமாகவும் தெளிவாகவும் எளிதாகவும் புரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சி “அகம் புறம் களம்

சுதந்திர இந்தியாவின் அன்றைய அரசியல் முதல் இன்றைய அரசியல் வரை அதிகம் பதிவு செய்யப்படாத பல அரசியல் நிகழ்வுகள் இந்நிகழ்ச்சியில் பதிவு செய்யப்படுகிறது. பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றத்தில் தலைவர்களின் கன்னிப்பேச்சு, இன்றை தேர்தல் களத்தில் அனல் பரக்கும் உரை வீச்சு, முதல் அமைச்சரவையின் சூழல் முதல் இனி அமையப்போகும் அமைச்சரவைக்கான வாய்ப்பு வரை அனைத்தையும் வாக்காளர்களுக்கு புரியும் வகையில் விளக்கும் இந்நிகழ்ச்சி, ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 11.30 மணிக்குக்கும், மறுஒளிபரப்பு ஞாயிறு மதியம் 12.30 மணிக்கும் புதிய தலைமுறையில் ஒளிபரப்பாகிறது.