“கிச்சன் கேபினட்”

“கிச்சன் கேபினட்”

புதிய தலைமுறை தொலைக்காட்சியில். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00க்கு ஒளிபரப்பாகும் கிச்சன் கேபினட் 1230 எபிசோடை கடந்து வெற்றிநடை போடுகிறது. 

அரசியல் நிகழ்வுகளை தினசரி திரைப்படமாய், அரசியல் வியாக்கியானங்களை விவரிக்கும் நவயுக அரசியல்வாதி ”பச்சைக் கிளி” என்கிற பெண் மேடைப் பேச்சாளரும், “குடை மடக்கி” என்கிற அவருடைய உதவியாளரும், சாமானியர்களின் பார்வையில் அரசியல் கேலி, தினசரி செய்திகளை துள்ளல் மெட்டுகளுடன் பாடலாய், ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது “கிச்சன் கேபினட்” ,

தலைப்புச் செய்திகளை வைத்து தினமும் ஒரு பாட்டு! 

முக்கிய நிகழ்வுகளை வைத்து தினம் ஒரு திரை விமர்சனம்! படம் எப்படி இருக்கு ?

அரசல் புரசல் செய்திகளை வைத்து சாமானியர்களின் அரட்டை! 

விவாதத்திற்கு உரியவைகளை நாசூக்கான நையாண்டியாக அரசியல் குறும்பு வழங்கும் ”பச்சைக் கிளி” , மற்றும் “குடை மடக்கி.

இப்படி நான்கு பிரிவுகளின் விதவிதமான வேடிக்கையான தொகுப்புதான் கிச்சன் கேபினட்! . இந்நிகழ்ச்சியை நிவேதா மற்றும் மோகனா தொகுத்து வழங்குகின்றனர். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10:00 மணிக்கு உங்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .